// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி புனித வளனார் கல்லூரியின் 183 வது விளையாட்டு விழா - மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பங்கேற்பு

திருச்சி புனித வளனார் கல்லூரியின் 183 வது விளையாட்டு விழா - மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பங்கேற்பு

திருச்சி தூய புனித வளனார் கல்லூரியின் 183 வது விளையாட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. 

கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம் இணை முதல்வர் முனைவர் த.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மண்டலக் காவல்துறைத்தலைவர் வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அனைத்துத்துறை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக திருச்சி சுங்கவரித்துறைக் கூடுதல் ஆணையரும் தூய வளனார் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கே.விஜயகிருஷ்ண வேலவன் பங்கேற்று மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி உரையாற்றினார். மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள், பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான அதிர்ஷ்ட சக்கரப் போட்டியும் விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. நிறைவாக விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளரும். துணை முதல்வருமான அருள்முனைவர் அருள்ஒளி நன்றியுரையாற்றினார்.

Post a Comment

0 Comments