கள்ளக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ ஹரி மினி மகாலில், Asian Paints Bath Sense, CFTUI – சுதந்திர இந்திய தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு மற்றும் பரணி தீபம் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய தொழிலாளர்களுக்கான மூன்று நாள் சிறப்புப் பயிற்சி முகாம், செப்டம்பர் 24 முதல் 26 வரை நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர் தொழிலாளர்களுக்குத் தொழில் சார்ந்த சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 114-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.பயிற்சியைச் சிறப்பாக நிறைவு செய்த தொழிலாளர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொழிலாளர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் CFTUI – சுதந்திர இந்திய தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. சரவணன், மாநிலச் செயலாளர் ஆர். கதிர்வேல், மண்டலத் தலைவர் ஆர். பிரபாகரன், மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பரணி தீபம் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் இளவரசி, மாநிலத் துணைத் தலைவர் சிவா, மாநிலப் பொருளாளர் பி.எஸ். சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
தொழிலாளர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இப்பயிற்சி முகாம் நிறைவடைந்தது.



0 Comments