திருச்சி முத்தமிழ்ச் சங்கம் சார்பில், திருச்சிராப்பள்ளி மாவட்ட இலக்கிய அமைப்புகள் வரலாறு நூல் வெளியீட்டு விழா மற்றும் கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா பட்டிமன்றம் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்க குளிர்மை அரங்கில் நடைபெறுகிறது. திருச்சி முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் செ.சக்திவேல் வரவேற்புரையாற்றுகிறார். சங்க ஆலோசகர் முனைவர் சு.செயலாபதி தலைமை வகிக்கிறார். சங்கத் துணைத் தலைவர் முங கு.கதிரேசன், ஒருங்கிணைப்பாளர் கவிஞர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஒருங்கிணைப்பாளர் தி.நெடுஞ்செழியன் நெறியாள்கை செய்கிறார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட இலக்கிய அமைப்புகள் வரலாறு” நூலை திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் தமிழவேள் உதயகுமார் பெரியசாமி வெளியிட சிரா இலக்கியக் கழக தலைவர் எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி பெற்றுக்கொள்கிறார் திருக்குறள் சு.முருகானந்தம் வாழ்த்துரை வழங்குகிறார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் நூல் ஆசிரியருமானயோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் ஏற்புரையாற்றுகிறார். கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா பட்டிமன்றத்தில் கவிஞர் கண்ணதாசன் பாடல்களில் பெரிதும் விஞ்சி நிற்பது குடும்ப உறவா? சமூக நலனா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. முத்தமிழ்ச்செம்மல் லால்குடி த.முருகானந்தம் நடுவராகப் பங்கேற்கிறார்.
குடும்ப உறவே அணியில் தேனிசைத் தென்றல் ஆ.செல்வம் (மணப்பாறை), கல்லூரி மாணவி ரா.முத்துலட்சுமி (திருச்சி) ஆகியோர் பேசுகின்றனர்.சமூக நலன் அணியில் பேராசிரியர் மு.ரஞ்சித் (திருவரங்கம்), கல்லூரி மாணவர் ஐ.பாலகணபதி (திருச்சி) ஆகியோர் உரையாற்றுகின்றனர். சி.சிவராமன், கவிஞர் கவிதா அசோகன், கவிஞர் செல்லா மாரிமுத்து மற்றும் கவிஞர் எஸ்.அப்துல் ரஹீம் உட்பட தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

0 Comments