திருச்சி இடையப்பட்டி துவரங்குறிச்சி நத்தம் சாலையில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பெயர் விலாசம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் சாலை இடதுபுற ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் பின்னால் காரை ஓட்டி வந்தவர் வாகனத்தை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து நடை பயணி மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தில் பெயர் விலாசம் தெரியாத ஆண் நபருக்கு தலையில் ரத்த காயமும் கை, கால்களில் காயமும் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காயம் பட்ட நபரை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்த போது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த நபரின் பிரேதத்தை உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ள நிலையில் யாரும் உடலை உரிமை கோரவில்லை. உரிமை கோரப்படாத பிரேதத்தை நல்லடக்கம் செய்வதற்காக உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு துவரங்குறிச்சி காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் செல்வேந்திரன் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் அண்ணா நகர் குழுமிக்கரை மயானத்தில் துவரங்குறிச்சி காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் செல்வேந்திரன் உடன் இணைந்து உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.
0 Comments