NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சியில் பள்ளிகள் திறப்பு

திருச்சியில் பள்ளிகள் திறப்பு



திருச்சியில் 1முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு 40 நாட்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு 

திருச்சி மாவட்டத்தில், உள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளான 540 பள்ளிகள் இன்று முதல்  திறக்கப்பட்டுள்ளது. இதில் 224 அரசு பள்ளிகளில் 3,675 ஆசிரியர்களும், 206 தனியார் பள்ளிகளில் 4,473 ஆசிரியர்களும், 110 உதவி பெறும் பள்ளிகளில் 2,312 ஆசிரியர்களும், என்று மொத்தம்  10ஆயிரத்து 460 ஆசிரியர்களும், 1,773 ஆசிரியரல்லாத பணியாளர்களும், பணியாற்றுகின்றனர்.

அரையாண்டு தேர்வு முடிந்து கடந்த டிசம்பர் 24ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டது. கொரோனோ பரவல் அதிகரிப்பால் அரையாண்டு விடுமுறை முடிந்தும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது 40 நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. 100சதவீத மாணவர்கள் வருகை தந்தனர் கொரோனோ  பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் செயல்படுகிறது. 

மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகவசம்  அணிந்து வந்தனர். பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் காய்ச்சல்  உள்ளதா என்பதை வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்த பின்னர் பள்ளியின் உள்ளே அனுமதிக்க பட்டனர். 


காய்ச்சல் இருந்தால் உடனடியாக கொரோனோ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். அனைத்து ஆசிரியர்கள் மற்றும் , 15 வயது முதல்  18வயத்துக்குட்பட்ட மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.



Post a Comment

0 Comments