NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** 10 வது வார்டு வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு தீவிர பிரச்சாரம்

10 வது வார்டு வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு தீவிர பிரச்சாரம்

 திருச்சி மாநகராட்சி 10-வது வார்டு திமுக வேட்பாளர் முத்துக்குமார் வெற்றி பெற்றால் உள்ளாட்சித்துறை திட்டங்கள் அனைத்தும் விரைந்து கிடைக்கும் என அமைச்சர் கே.என். நேரு உறுதி அளித்தார்


நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 10 வது வார்டில் திமுக வேட்பாளர் முத்துக்குமார் போட்டியிடுகிறார். வேட்பு மனுதாக்கல் செய்த உடன் தீவிர வாக்கு சேகரிப்பில் முத்துக்குமார் ஈடுபட்டு வருகிறார். வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி அவர் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மாநகராட்சியில் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் 10 வது வார்டில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம், பூத் கமிட்டி மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசுகையில்....


கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்த வார்டுக்கு எதுவுமே செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் நாங்களே பாராட்டி இருப்போம். எவ்வித நலத்திட்டங்களும் செயல்படுத்தப் படவில்லை. தற்போது குடிநீர் தேவை என்றால் ஒரு மணி நேரத்தில் செய்து கொடுக்கக் கூடிய வசதி வாய்ப்புகள் உள்ளது. நகராட்சி துறை அமைச்சராக நான் இருக்கிறேன். தேர்தல் முடிந்தவுடன் இந்த வார்டுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளும் செய்து கொடுக்க வேண்டியது எங்களது பொறுப்பு. ஆகையால் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து முத்துக்குமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழக முதல்வருக்கு உறுதுணையாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்த வார்டுக்கான அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க எங்களுக்கு உறுதுணையாக முத்துக்குமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் அனைத்து பணிகளும் வார்டுக்கு விரைவாக கிடைக்கும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments