தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாநகராட்சி 58 வது வார்டில் திமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் கவிதா செல்வம் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் கவிதா செல்வம். வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மாநகராட்சியில் பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று மாலை 58 வது வார்டுக்குட்பட்ட கிராப்பட்டி பகுதிகளில் வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
வேட்பாளர் கவிதா செல்வத்தை எந்த நேரமும் தொடர்பு கொள்ள முடியும். ஆளும் கட்சி வேட்பாளர். ஏற்கனவே மூன்று முறை வெற்றி பெற்று பல நல்ல திட்டங்களை இந்த வார்டுக்கு பெற்று தந்தவர். அவர் வெற்றி பெற்றால் வார்டுக்கு அடிப்படைத் தேவைகள் விரைந்து கிடைக்கும். மேலும் இவரது கணவர் வட்ட செயலாளர் கிராப்பட்டி செல்வம், அமைச்சர் நேருவுக்கு நெருக்கமாக இருப்பதால் நகர்ப்புற வளர்ச்சித் துறை மூலம் வார்டுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும். இதுபோன்ற கூடுதல் பலம் காரணமாக கவிதா செல்வம் நிச்சயம் வெற்றி பெறுவார். அவருக்கு வார்டு மக்கள் ஆதரவளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வார்கள் என்று அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார்.
0 Comments