தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 29 வது வார்டில் திமுக சார்பில் உதய சூரியன் சின்னத்தில் கமால் முஸ்தபா போட்டியிடுகிறார். இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று 29 வது வார்டுக்குட்பட்ட ஆழ்வார் தோப்பு பகுதியில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் திருமண உதவித்தொகை, முதியோர் மற்றும் விதவை தொகை உடனே பெற்றுத் தர வழிவகை செய்யப்படும், நமது வார்டில் மக்கள் பயன்படும் வகையில் இலவசமாக இ-சேவை மையம் அமைத்து தரப்படும், மேலும் 29 வது வார்டை முன்மாதிரியான வார்டாக மாற்றி காட்டுவேன் என்று தெரிவித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் போது கேபிள் அப்பாஸ், பத்தி R. அன்வர் தீன், மார்க்கெட் சலீம், யாசின், சேட்டு, மஜீத், சுல்தான் சாலிஹ், பத்தி முஹம்மது ஆசிக், ஜேபி.இப்ராஹிம் உள்பட
வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.
0 Comments