தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 25 வது வார்டில் திமுக சார்பில் கே.எஸ்.நாகராஜன் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் நாகராஜன். வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி அவர் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் 25 வது வார்டு பகுதிக்குட்பட்ட செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி கூட்டம் நேற்று மாலை உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு வேட்பாளர் நாகராஜனை ஆதரித்து பேசினார். அதில் அவர் கூறுகையில்...
வேட்பாளர் நாகராஜன் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை கட்சியில் பொதுமக்களுக்காக சிறப்பாக பணியாற்றி வருபவர். இவரை நீங்கள் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றவுடன் உங்கள் பகுதியில் இருக்கும் குறைகளை என்னிடம் சொல்வார், அந்த குறைகளை உடனடியாக நான் தீர்த்து வைப்பேன். தேர்தல் முடிந்தவுடன் இந்த வார்டுக்கு தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படும். மேலும் அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை இந்த தொகுதி மக்களுக்கு வழங்கிட நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் நாகராஜனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூறினார். இந்தக் கூட்டத்தில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி மாநகரச் செயலாளர் அன்பழகன் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 Comments