திருச்சி 22வது வார்டு வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 22வது வார்டில் திமுக சார்பில் விஜயலட்சுமி கண்ணன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்து தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி தில்லைநகர் பகுதியில் 22 வது வட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு வேட்பாளர் விஜயலட்சுமி கண்ணனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 Comments