NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** திருச்சி 12 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் சூறாவளி பிரச்சாரம்

திருச்சி 12 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் சூறாவளி பிரச்சாரம்

 நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக பாலமுருகன் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தனது 12 வது  வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

                                                    


வீடு வீடாக சென்று மக்களிடம் தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு அப்பகுதி மக்கள் வழிநெடுகிலும் நின்று உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். தனது 15 வருட கால அரசியல் அனுபவத்தின் மூலமும், விறுவிறுப்பான பிரச்சாரம் மூலமும் பாலமுருகன் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.




பிரச்சாரத்தின் போது வேட்பாளர் பாலமுருகன் பொதுமக்களிடம் பேசும்போது... கடந்த ஆட்சியில் இந்த வார்டில் மக்களின் எந்த அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படவில்லை. நான் வெற்றிபெற்றால் மக்களின் குரலாக மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் செயலாற்றுவேன். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று தெரிவித்தார்

Post a Comment

0 Comments