NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** திருச்சி 22 வது வார்டு திமுக வேட்பாளர் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பு

திருச்சி 22 வது வார்டு திமுக வேட்பாளர் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


திருச்சி மாநகராட்சி 22 வது வார்டில் திமுக சார்பில் உதய சூரியன் சின்னத்தில் தில்லை நகர் பகுதி செயலாளர் கண்ணன் மனைவி, விஜயலட்சுமி கண்ணன் அவர்கள் போட்டியிடுகிறார். இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்


வாக்கு சேகரிப்பின் போது  அங்குள்ள உணவகத்திற்கு சென்று   தோசை சுட்டு  இலவசமாக கொடுத்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்அந்த வகையில் 22 வதுவார்டு தில்லைநகர் பகுதிக்குட்பட்ட வாமடம், ரஹ்மானியாபுரம், ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தனர்.

இந்நிகழ்வின் போது தில்லை நகர் வட்டச் செயலாளர், இளையராஜா பிரதிநிதிகள் அன்பழகன், ரங்கநாதன், மாணிக்கவாசகம், காளிமுத்து ,உசேன்,  காஜா சரவணன் தில்லை ஆறுமுகம்,பாஸ்கர், அரவிந்த், ஜோதி ,மார்த்தாண்டம், மாரிமுத்து ,சுந்தர்ராஜ் மகாலட்சுமி ,நளினி  உஷா பொற்கொடி பிலால் ,சேகர்  காஜாபாய்  ஆகியோர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments