// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** 157 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமிரா பொருத்த முடிவு திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

157 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமிரா பொருத்த முடிவு திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கான தேர்தல் நுண்பார்வையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் தேர்தல் பார்வையாளர் கலைச்செல்வி மோகன்,  தலைமையில், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்  சு.சிவராசு, அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்

தேர்தல் நுண்பார்வையாளர்கள் தேர்தலில் சிறப்புடன் பணியாற்றிட  தேர்தல் பார்வையாளர் ஆலோசனை வழங்கிப் பேசினார்.


திருச்சி மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட 1262 வாக்குச்சாவடிகளில் 3 பேர் போட்டியின்றித்  தேர்ந்தெடுக்கட்டதை முன்னிட்டு, இதற்கான 4 வாக்குச்சாவடிகள் தவிர்த்து 1258 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இவை அனைத்திலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டும்,

இவற்றில் 157 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு, இவற்றில் கண்காணிப்பு காமிராக்களுடன் கூடுதலாக வெப் காமிராக்கள் பொருத்தப்பட்டும் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிக்கப் படுகின்றன. இவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 47 வாக்குச்சாவடி மையங்களில் , வங்கி  அலுவலர்களைக் கொண்ட 47 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடவடிக்கைகளை கண்காணிக்கின்றனர்.

Post a Comment

0 Comments