NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி துவாக்குடி நகராட்சி 19 வது வார்டு வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

திருச்சி துவாக்குடி நகராட்சி 19 வது வார்டு வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 19 வது வார்டில் திமுக சார்பில் A. பேரின்ப நாயகி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். 





அந்த வகையில் இன்று 19 வது வார்டு பகுதிகளான அய்யப்ப நகர், திருவள்ளுவர் நகர், சக்தி நகர், பாரதியார் நகர், ராவுத்தான் மேடு ஆகிய பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது அல்லிமுத்து, சக்தி, பார்த்திபன், சுரேஷ், ராஜ் குமார், சசிகுமார், sp. சண்முகம், வெங்கடேஷ், கணேசன், அன்புசெல்வி, மீனாட்சி, மேனகா, அமுதா, ரோஸி, ஜெயந்தி, ஜெசிந்தா, லதா, விஜயராணி உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments