NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** வழக்கறிஞர் செந்தில் 43 வது வார்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

வழக்கறிஞர் செந்தில் 43 வது வார்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

 தமிழகம் முழுவதும் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளன. இந்நிலையில் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் அவரவர் வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 





அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 43வது வார்டில் திமுக சார்பில் வழக்கறிஞர் செந்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தனது 43வது வார்டுக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் ,ஸ்ரீ ராம் நகர் பகுதிகளுக்கு வீடு வீடாக நடந்து சென்று தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது வட்ட செயலாளர் முருகானந்தம் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments