// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** துவாக்குடி நகராட்சி 21 வது வார்டு வேட்பாளர் கர்ணன்(எ) சந்திர சேகர் தீவிர பிரச்சாரம்

துவாக்குடி நகராட்சி 21 வது வார்டு வேட்பாளர் கர்ணன்(எ) சந்திர சேகர் தீவிர பிரச்சாரம்

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 21 வது வார்டில் திமுக சார்பில் கர்ணன் (எ) சந்திர சேகர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். 



இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் இன்று 21 வது வார்டு பகுதிகளான 

அங்காளம்மன் கோவில் தெரு, செல்லாயி அம்மன் கோயில் தெரு, கீழத்தெரு, மேலத் தெரு நடுத்தெரு ஆகிய பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments