NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு 43 வது வார்டு ஜான்பீட்டர் தீவிர பிரச்சாரம்

தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு 43 வது வார்டு ஜான்பீட்டர் தீவிர பிரச்சாரம்

 திருச்சி மாநகராட்சி 43 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கான்கிரீட்-A ஜான்பீட்டர் தீவிர வாக்கு சேகரிப்பு


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 43 வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக கான்கிரீட்- A. ஜான்பீட்டர் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். 



வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ஜான்பீட்டர். வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி அவர் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மாநகராட்சியில் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று தனது 43வது வார்டுக்குட்பட்ட குறிஞ்சி நகர், அம்பேத்கார் நகர், காவேரி நகர், முருகன் கோவில் ராஜவீதி, கமலா நேரு நகர், ஜோதிபுரம், பர்மா காலனி, ஆயில் மில், மலையப்ப நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை நோட்டீஸ் வழங்கி தீப்பெட்டி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது ஆரோக்கியநாதன், ராஜா டி.எம்.வேளாங்கண்ணி, முனாவர் அலி, ஸ்டாலின் ராஜா, சார்லஸ், 

சா.வில்லியம், பகுருதீன், சுப்ரமணியன், ராணி, டேவிட், ஆயில் மில் அண்ணாதுரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments