திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 23வது வார்டு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 23 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் க.சுரேஷ் குமார் போட்டியிடுகிறார். 23 வது வார்டு பகுதிகளுக்குட்பட்ட தேவர் காலனி மற்றும் காந்திபுரம் ,புத்தூர் வடக்கு எடத்தெரு, தெற்கு எடத்தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு ,போலீஸ் ரங்கசாமி நாயுடு தெரு உள்ளிட்ட பகுதிகளில் திமுக வட்ட செயலாளர்கள் ரவி மற்றும் கோவிந்தன் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
. செல்லும் இடங்களில்லெல்லாம் பெண்கள் மற்றும் ஊர் பெரியவர்கள், மாணவர் இளைஞர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
0 Comments