NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** திருச்சி 46 வது வார்டு வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

திருச்சி 46 வது வார்டு வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

  திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு திமுக வேட்பாளர் ரமேஷ் தீவிர பிரச்சாரம் 

பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டில் திமுக சார்பில் உதய சூரியன் சின்னத்தில் ரமேஷ் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்ததை தொடர்ந்து தனது வார்டு முழுவதும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.






வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி அவர் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மாநகராட்சியில் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து ரமேஷ் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று 46 வது வார்டுக்குட்பட்ட பொன்மலைப்பட்டி மெயின் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் செய்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது வட்ட செயலாளர் பரமசிவம், துணை வட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரவி,  பிரதிநிதிகள் பாபு, A.சூசைராஜ், VM. ஜானகிராமன், இளைஞர் அணியைச் சேர்ந்த யுவராஜ், TM. குமார், NR. மனோகர், PK. மூர்த்தி, கீழக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் ஜெயராஜ், வார்டு உறுப்பினர் சிவா, ஜோதி

உள்பட வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments