25வது வார்டு செயல்வீரர்கள் கூட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம்- திமுக மாநகர செயலாளர் அன்பழகன் பங்கேற்பு
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 25 வது வார்டில் திமுக சார்பில் நாகராஜ் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் நாகராஜ். வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி அவர் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் 25வது வார்டு செயல்வீரர்கள் கூட்டம் இன்று மாலை அப்பகுதியில் நடைபெற உள்ளது. இது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று மாலை வேட்பாளர் நாகராஜ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திமுக மாநகர செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் வட்டக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
0 Comments