NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** திருச்சி கிராப்பட்டி, முஸ்லிம் தெரு கபர்ஸ்தான், TLC, RC கல்லறையில் அதிநவீன LED மின்விளக்குகள் அமைக்கப்படும்-திருச்சி மாநகராட்சி 58 வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா செல்வம் உறுதி

திருச்சி கிராப்பட்டி, முஸ்லிம் தெரு கபர்ஸ்தான், TLC, RC கல்லறையில் அதிநவீன LED மின்விளக்குகள் அமைக்கப்படும்-திருச்சி மாநகராட்சி 58 வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா செல்வம் உறுதி

 கிராப்பட்டி முஸ்லிம் தெரு கபர்ஸ்தான், TLC, RC  கல்லறையில் அதிநவீன LED மின்விளக்குகள் அமைக்கப்படும்-திருச்சி மாநகராட்சி 58 வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா செல்வம் உறுதி

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாநகராட்சி 58 வது வார்டில் திமுக சார்பில் கவிதா செல்வம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஏற்கனவே மூன்று முறை மாமன்ற உறுப்பினராக இருந்தவர் கவிதா செல்வம். அந்த வகையில் இவர் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார் கவிதா செல்வம். இந்நிலையில் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்து தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று சிம்கோ காலணி, எமிலி நகர் , அன்பு நகர், காந்தி நகர், புஷ்பம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் அவர் கூறுகையில்...






கிராப்பட்டி முஸ்லிம் தெரு கபர்ஸ்தான், TLC, RC  கல்லறையில் அதிநவீன LED மின்விளக்குகள் அமைக்கப்படும். கிராப்பட்டி முஸ்லிம் தெருவில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைத்து தரப்படும்.




முதியோர் மற்றும் விதவை உதவி பணம் தகுதியுள்ள  பயனாளர்களுக்கு தொடர்ந்து பெற்றுத்தரப்படும். பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டத்தின் மூலம் ரூபாய் 25000 தொடர்ந்து பெற்று தரப்படும். இரண்டு நியாயவிலை கடைகளுக்கு புதிதாக கட்டிடம் அமைத்து தரப்படும். இது போன்ற இன்னும் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வர வாக்காளர்களாகிய நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வாக்கு சேகரிப்பின் போது வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments