திருச்சி மாநகராட்சி 25வது வார்டில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் நாகராஜன் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் நாகராஜன்.
வார்டு முழுவதும் வேட்பாளர் நாகராஜனுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதோடு வார்டு பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். சூறாவளிப் பிரச்சாரம் மூலம் வார்டு மக்களிடம் அமோக ஆதரவை பெற்று வருகிறார் நாகராஜன். அதன் காரணமாக அவரது வெற்றி வாய்ப்பு நெருங்கிவிட்டதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளது. வாக்கு சேகரிப்பின் போது வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.
0 Comments