தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 25 வது வார்டில் திமுக சார்பில் நாகராஜ் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் நாகராஜ். வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி அவர் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார்
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் மூலம் வார்டு முழுவதும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன். 24 மணிநேரமும் வார்டு மக்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். மக்கள் பிரச்சினைக்காக மாமன்றத்தில் குரல் கொடுப்பேன். சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர், குப்பை, கழிவுநீர், கால்வாய், கொசு ஒழிப்பு , சுகாதாரப்பணிகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று கூறினார். இவருக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
0 Comments