NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** நாளை பிரச்சாரம் ஓய்கிறது...!! தீவிர பிரச்சாரத்தில் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன்

நாளை பிரச்சாரம் ஓய்கிறது...!! தீவிர பிரச்சாரத்தில் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன்

 நடைபெற உள்ள தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து தனது தொகுதிக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் இன்று தனது 12வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக நடந்து சென்று ஒவ்வொரு வாக்காளரையும் தனித்தனியாக சந்தித்து தேர்தல் வாக்குறுதிகளை அவர்களிடம் எடுத்துரைத்து தென்னை மரம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும்  அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவருடன் பிரச்சாரத்திலும் தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 











பிரச்சாரத்தின் போது பாலமுருகன் பொது மக்களிடம் பேசுகையில்...


பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு புதிய குடிநீர் குழாய்கள் மூலம் சுத்தமான குடிநீர் வீடுகளுக்கு வழங்கப்படும். அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு சுயதொழில் தொடங்க அரசு மூலம் நிதி உதவி கிடைக்க வழிவகை செய்து தரப்படும். ஒவ்வொரு மாதமும் நமது வார்டில் மெடிக்கல் கேம்ப் நடத்தி அனைவரின் உடல் நலத்தையும் பேணி காப்பேன். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் அனைத்து தெருக்களையும் தினமும் சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற பல திட்டங்களை இந்த வார்டு மக்களுக்கு வழங்கிட வாக்காளராகிய நீங்கள் தென்னை மரம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Post a Comment

0 Comments