// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** 13 வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

13 வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் மூன்று தினங்களில் (பிப்ரவரி 19) நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 13 வது வார்டில் அதிமுக சார்பில்  G.கிருஷ்ண வேணி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்த உடன் தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் வேட்பாளர் கிருஷ்ண வேணி. 





மேலும் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 13-வது வார்டுக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரம் செல்லுமிடங்களில் அப்பகுதி மக்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது வட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments