BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி உய்யகொண்டான் ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக புகார்....!

திருச்சி உய்யகொண்டான் ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக புகார்....!

 திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் காவிரி ஆற்றிலிருந்து பிரியும் உய்யகொண்டான் ஆறு , திருச்சி மாநகர் வழியாகக் கடந்து திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை ஏரியில் இணைகிறது. இந்த ஆற்றை 1000 ஆண்டுக்கு முன் ராஜராஜசோழன் வெட்டினார்.

அதன் பின் வாழவந்தான் கோட்டை ஏரியிலிருந்து உய்யக் கொண்டான் விரிவாக்க வாய்க்கால் வெட்டப்பட்டு அந்த வாய்க்கால் தஞ்சை மாவட்டம் சேராண்டி ஏரியில் நிறைவு பெறுகிறது.




இந்த ஆற்றைப் பராமரிக்க அந்த காலத்திலேயே உய்ய கொண்டான் ஆற்றுப் பாதுகாப்பு வாரியம் கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு 120 கிளை வாய்க்கால்கள் உள்ளன. 32 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுகிறது. 33 ஏரி, குளங்களை நிரப்புகிறது. 


வரலாற்றுப் பெருமை கொண்ட உய்யக் கொண்டான் ஆற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனக் கோரி 2013 லிருந்து தண்ணீர் அமைப்பு உள்பட மாவட்டத்தில் பல அமைப்புகள் ஒருங்கிணைந்து ' உய்யக்கொண்டான் பாதுகாப்புக்குழு' என மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டு பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அன்றைய தமிழக முதல்வர் உய்யக் கொண்டான் ஆற்றை சீரமைக்க 2014 யில் 14 கோடி திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியிலிருந்து பாலக்கரை பகுதியில் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டது.ஆற்றில் தண்ணீர் வந்து, பாசனத் தேவை இருந்தால் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டது.அதன் பின் வந்த மாவட்ட ஆட்சியர்கள் உய்யக்கொண்டான் பாதுகாப்புக் குழு கூட்டத்தை நடத்தவில்லை.


உய்யக்கொண்டான் ஆற்றில் தண்ணீர் குறையும் போது நுரை, துர்நாற்றம் , வருவதுடன், மீன்கள் செத்து மிதக்கிறது. உய்யக்கொண்டான் ஆற்றை சீரமைப்பதில் தொடக்கத்திலிருந்தே மாநகராட்சி தரப்பில் முழுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. மாநகராட்சி பகுதியிலிருந்து வரும் கழிவுநீர் உய்யக்கொண்டான் ஆற்றில் விடுவதால் திருச்சியின் கூவமாக மாறிவிடும்.


எனவே கிராமப்புறங்களில் முன்பு இயங்கிய 'உய்யக்கொண்டான் ஆற்றுப் பாதுகாப்பு வாரியத்தை ' மீண்டும் அமைக்க வேண்டும். நகர்ப்புறங்களில் தன்னார்வ ஆற்றுப் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் .கழிவு நீர் ஆற்றில் கலப்பதை நிறுத்த வேண்டும்.குழுமாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கோவிலில் அருகே ஆற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கழிவுநீர் நுரையாக வெளிவருவதால் தண்ணீரின் நிறமும் அசுத்தமாக காட்சி அளித்துள்ளது.


மே மாதம் 2018 ல் இதேபோன்ற ஒரு சம்பவம் பதிவாகி உள்ளது அதனை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது ஆனால் அதனை சரிசெய்வதற்கான எவ்வித தொடர் முயற்சிகளும் செய்யப்படவில்லை.தொடர்ந்து நுரை, துர் நாற்றம், தண்ணீரை ஆய்வு செய்து மாவட்ட , மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என சமூக அலுவலர் கோரிக்கை . 



Post a Comment

0 Comments