NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** தென்னை மரம் சின்னத்தில் வாக்கு கேட்டு 46 வது வார்டு வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

தென்னை மரம் சின்னத்தில் வாக்கு கேட்டு 46 வது வார்டு வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

 நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு சுயேட்சை வேட்பாளராக P. உஷாராணி தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் கடந்த மூன்று முறை கவுன்சிலராக வெற்றி பெற்று மக்கள் பணி ஆற்றியுள்ளார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்த உஷாராணி தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 



இவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றி தருவேன். அதற்காக மாநகராட்சியில் போராடுவேன் என்று உறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 46 வது வார்டுக்கு உட்பட்ட கொட்டப்பட்டு மெயின் ரோடு, காளியம்மன் கோவில் தெரு, மொரைஸ் கார்டன், கைலாஷ் நகர், ஐஸ்வர்யா எஸ்டேட் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று ஒவ்வொரு வாக்காளரையும் தனித்தனியாக சந்தித்து தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து நோட்டீஸ் வழங்கி தென்னைமரம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments