NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** 29 வது வார்டு வேட்பாளர் கமால் முஸ்தபா வை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பிரச்சாரம்

29 வது வார்டு வேட்பாளர் கமால் முஸ்தபா வை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பிரச்சாரம்

 திருச்சி மாநகராட்சி 29 வது வார்டு திமுக வேட்பாளர் கமால் முஸ்தபாவை ஆதரித்து மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பிரச்சாரம்




தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 29 வது வார்டில் திமுக சார்பில் கமால் முஸ்தபா உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்த கமால் முஸ்தபா தனது வார்டுக்குட்பட்ட சின்னசாமி நகர், அண்டகொண்டான், காஜா தோப்பு, காயிதே மில்லத் நகர், ஜாகிர் உசேன் நகர், ஆழ்வார் தோப்பு, ஹிதாயத் நகர் 


ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று, ஒவ்வொரு வாக்காளரையும் தனித்தனியாக சந்தித்து தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து துண்டு பிரசுரம் வழங்கி உதய சூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் 29 வது வார்டுக்குட்பட்ட ஆழ்வார் தோப்பு பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில செயலாளரும், மணப்பாறை சட்ட மன்ற உறுப்பினருமான அப்துல் சமது, திமுக வேட்பாளர் கமால் முஸ்தபாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்.... 


 தமிழகத்தில் திமுக ஆளுங்கட்சியாக உள்ளது உள்ளாட்சி தேர்தலில் உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்தால் அரசின் திட்டங்கள் விரைவில் வந்து சேரும், இதனால் திமுக சின்னத்தில் போட்டியிடும் கமால் முஸ்தபாவை வெற்றியடையச் செய்ய வேண்டும் .


29-வது வார்டு பகுதியில் அடிப்படைத் தேவைகள் முற்றிலுமாக மேம்படுத்தப்படும். தற்பொழுது நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சராக இருப்பவர் கே என் நேரு இதனால் இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மேம்படுத்தப்படும். எனக் கூறினார்

29 வது வார்டு மக்கள் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் கமால் முஸ்தபாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

Post a Comment

0 Comments