திருச்சி மாநகராட்சி 28 வது வார்டு மமக வேட்பாளர் பைஸ் அகமது வை ஆதரித்து மமக அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆபிதீன் பிரச்சாரம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுகின்றது. திருச்சி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சியில் மொத்தம் 6 வார்டுகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இதில் திருச்சி மாநகராட்சி 28 வது வார்டில் பைஸ் அகமது உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதற்காக வேட்புமனு தாக்கல் செய்த பைஸ் அகமது தனது வார்டுக்குட்பட்ட குத்பிஷா நகர், தென்னூர் மந்தை, தென்னூர் அக்ரஹாரம், காவல் கார தெரு, வெள்ளாள தெரு, தென்னூர் அண்ணா நகர், இனாம் தார் தோப்பு, பாரதி நகர், சத்தியா நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று, ஒவ்வொரு வாக்காளரையும் தனித்தனியாக சந்தித்து தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து துண்டு பிரசுரம் வழங்கி உதய சூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் 28 வது வார்டுக்குட்பட்ட தென்னூர் குத்பிஷா நகர் பகுதியில்
இன்று மாலை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில்
மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆபிதீன் கலந்து கொண்டு
வேட்பாளர் பைஸ் அகமதை ஆதரித்து பேசினார். அதில்...
பைஸ் அகமது பொதுமக்களுக்காக போராடக்கூடிய போராளி. அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரக்கூடிய தகுதி பெற்றவர். 25 வயதில் அமைப்பின் மாவட்ட செயலாளராக இருந்து பொது கூட்டங்களை , நிகழ்ச்சிகளை நடத்தியவர். பைஸ் அகமது கூறினால் அமைச்சர் நேரு, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட இருவரும் நேரில் வருவார்கள். தேர்தல் என்றால் ஒரு கூட்டம் கிளம்பும் நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று, அப்படிப்பட்டவர் இல்லை பைஸ் அகமது. கொரோனா பதித்து இறந்த உடலை புதைப்பதற்கும், தொடுவதற்கும் அனைவரும் அச்சப்பட்ட நிலையில் தமுமுக மற்றும் மமக உடல்களை பெற்று அடக்கம் செய்தது. அப்படி பட்ட கட்சியான மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் பைஸ் அகமது தேர்தலில் நிற்கிறார். அவருக்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்யவேண்டும் என பேசினார். இக்கூட்டத்தில் திமுக 28 வது வார்டு பொறுப்பாளர் அம்ஜத், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மமக தலைமை கழக பேச்சாளர் ஷெரீப் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 Comments