நடைபெற உள்ள தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 48 வது வார்டில் திமுக சார்பில் இ.எம் தர்மராஜ் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் தர்மராஜ் ஈடுபட்டு வருகிறார். வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி அவர் வாக்கு சேகரித்து வருகிறார்.
மேலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய மாநகராட்சியில் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் 48 வது வார்டுக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதியில் இன்று காலை பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேட்பாளர் தர்மராஜை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அமைச்சர் பேசுகையில்...
வேட்பாளர் தர்மராஜ் நீண்ட காலமாக கட்சியில் மக்கள் பணியாற்றி வருகிறார். அவர் வெற்றி பெற்றால் தமிழக அரசின் திட்டங்கள் உடனடியாக வார்டு மக்களை வந்து சேரும். அதோடு வார்டின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய முடியும். ஆகையால் வார்டு மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தர்மராஜை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வாக்கு சேகரிப்பின் போது வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.
0 Comments