NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** 58 வது வார்டு திமுக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம்..பெருகும் மக்கள் ஆதரவு

58 வது வார்டு திமுக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம்..பெருகும் மக்கள் ஆதரவு

 திருச்சி மாநகராட்சி 58 வது வார்டு திமுக  வேட்பாளர் கவிதா செல்வம் வாக்காளர்கள் மனதில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.


தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வாா்டுகளில் திமுக 51, காங்கிரஸ் 5, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தலா 2 வாா்டுகள், மனிதநேய மக்கள் கட்சி ஒரு வாா்டிலும் போட்டியிடுகின்றன. 






இந்நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சார வேகத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்




அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 58 வது வார்டில் திமுக சார்பில் கவிதா செல்வம் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து தனது தொகுதிக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் இன்று தனது 58 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக நடந்து சென்று ஒவ்வொரு வாக்காளரையும் தனித்தனியாக சந்தித்து தேர்தல் வாக்குறுதிகளை அவர்களிடம் எடுத்துரைத்து உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும்  அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவருடன் பிரச்சாரத்திலும் தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


அப்போது அப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் கூறுகையில்... 


வேட்பாளர் கவிதா செல்வத்திற்கு வாக்களித்தால் எங்கள் பகுதிக்கு நலத்திட்ட உதவிகள் எளிதில் கிடைக்கும். வாக்காளர்கள் மத்தியில் அவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதோடு மூன்று முறை பதவியில் இருந்த  காலகட்டத்தில் வார்டு மக்களுக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். கொரோனா பேரிடர், தீ விபத்து, மழை, வெள்ள பாதிப்பு போன்ற காலகட்டங்களில் மக்களுக்கு உதவி செய்துள்ளார். அதனால் இந்த வார்டில் கவிதா செல்வம் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்தார்.


Post a Comment

0 Comments