NEWS UPDATE *** ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு *** 52 வது வார்டு திமுக வேட்பாளரை ஆதரித்து IUML தலைவர் வாக்கு சேகரிப்பு

52 வது வார்டு திமுக வேட்பாளரை ஆதரித்து IUML தலைவர் வாக்கு சேகரிப்பு

 நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 52 வது வார்டில் திமுக சார்பில் துர்கா தேவி போட்டியிடுகின்றார். இதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்த துர்கா தேவி தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 52 வது வார்டுக்குட்பட்ட மார்சிங்பேட்டை பகுதியில் உள்ள துருப்பு பள்ளிவாசலில் இந்திய முஸ்லீம் லீக் தலைவர் காதர் மைதீனை சந்தித்த வேட்பாளர் துர்கா தேவி அவரிடம் ஆசி பெற்று அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 


52 வது வார்டு மக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தி தரப்படும். அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் உரிய முறையில் பெற்று தரப்படும். மேலும் இது போன்ற பல திட்டங்களை தனது வார்டு மக்களுக்கு அளித்திட வாக்காளர்களாகிய நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


வாக்கு சேகரிப்பின் போது வட்ட செயலாளர் செல்வராஜ், மேலப்புதூர் ராஜன் பாபு, சங்கரன், ரஜினி கிங், ராஜ கணபதி, மார்ஸிங் பேட்டை பிரபு, முருகா, மோகன் மற்றும் மகளிரணியை சேர்ந்த மேகலா, ஜாக்குலின், ஜமுனா, பானு, சௌந்தர்யா, செந்தில்ராஜலட்சுமி, ரெக்சி, சிவாணி உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்

Post a Comment

0 Comments