// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு 55 வது வார்டு ஜோசப் ஜெரால்டு தீவிர பிரச்சாரம்

இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு 55 வது வார்டு ஜோசப் ஜெரால்டு தீவிர பிரச்சாரம்

 திருச்சி மாநகராட்சி 55-வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு தீவிர வாக்கு சேகரிப்பு


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி  மாநகராட்சி 55-வது  வார்டு உறுப்பினர் பதவிக்கு  அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட A. ஜோசப் ஜெரால்டு மனுத்தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.



அந்த வகையில் இன்று 

தனது வார்டுக்குட்பட்ட பொன்நகர், சேட்டு காலனி, காந்தி நகர்  உள்ளிட்ட  பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.


இந்த வாக்கு சேகரிப்பின் போது

ஜங்சன் பகுதி மாணவரணி செயலாளர் கருமண்டபம்  P.வெங்கடேசன்,  வட்டச்செயலாளர் அமீர், வட்ட துணை செயலாளர் செந்தில், மற்றும் D.மனோகர், பெங்களூர் ஜான் உட்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments