நடைபெற உள்ள தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 54 வது வார்டில் முன்னாள் கவுன்சிலர் ராமமூர்த்தி போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே இரண்டு முறை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் ஆவார். இந்நிலையில் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ராமமூர்த்தி.
அந்தவகையில் இன்று ராஜா காலனியில் அமைந்துள்ள சர்வ சித்தி வலம்புரி விநாயகர் கோயிலில் வழிபட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்பகுதியில் உள்ள ராஜா காலனி, குமுளி தோப்பு, பர்மா காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது ராஜேஷ், சாமிநாதன், குமார், பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments