திருச்சி மாநகராட்சி 22 வது வார்டு திமுக வேட்பாளர் விஜயலட்சுமி கண்ணனுக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்...
அந்த வகையில் இன்று தில்லை நகர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி உதய சூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மாநகராட்சியில் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
வேட்பாளர் விஜயலட்சுமி கண்ணனை எந்த நேரமும் தொடர்பு கொள்ள முடியும். ஆளும் கட்சி வேட்பாளர். அவர் வெற்றி பெற்றால் வார்டுக்கு அடிப்படை தேவைகள் விரைந்து கிடைக்கும். மேலும் தில்லை நகர் பகுதி செயலாளரின் மனைவி என்பதால் வார்டுக்கு புதிய திட்டங்கள் பல கிடைக்கும். இதனால் வேட்பாளர் விஜயலட்சுமி கண்ணன் நிச்சயம் வெற்றி பெறுவார். அவருக்கு வார்டு மக்கள் ஆதரவு அளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வார்கள் என்று அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தெரிவித்தார்.
இன்று வாக்கு சேகரிப்பின் போது தில்லை நகர் வட்டச் செயலாளர் இளையராஜா, பிரதிநிதிகள் அன்பழகன், ரங்கநாதன், மாணிக்கவாசகம், காளிமுத்து, உசேன், காஜா சரவணன், தில்லை ஆறுமுகம், பாஸ்கர், அரவிந்த், ஜோதி, மார்த்தாண்டம், மாரிமுத்து, சுந்தர்ராஜ், மகாலட்சுமி, நளினி, உச்சா, பொற்கொடி, பிலால், சேகர், காஜாபாய் ஆகியோர் கலந்து கொண்டனர்
0 Comments