நடைபெற உள்ள தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 58 வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் கவிதா செல்வம் போட்டியிடுகிறார். முன்னாள் கவுன்சிலரான இவர் 3 முறை வெற்றி பெற்று மக்கள் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் தனது 58 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று ஜோசப் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, சக்தி விநாயகர் கோவில் தெரு, அருள் நாயக தெரு, காந்தி நகர் இரண்டாவது தெரு, காவேரி நகர் ஆகிய பகுதிகளில் மழையையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாக நடந்து சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் கவிதா செல்வம் பொதுமக்களிடம் பேசுகையில்... அரசு வேலைவாய்ப்பில் முதல் தலைமுறை பட்டதாரிக்கு முன்னுரிமை அளிக்கப்படும், தாய் சேய் நலத்திட்டம் மூலம் வீட்டிற்கு சென்று மருத்துவப் பணி மேற்கொள்ளப்படும். இது போன்று எண்ணற்ற திட்டங்களை தனது வார்டுக்குட்பட்ட மக்களுக்கு வழங்க வாக்காளர்களாகிய நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வாக்கு சேகரிப்பின் போது வட்ட செயலாளர் செல்வம் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் உடனிருந்தனர்
0 Comments