// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** திருச்சி விமானநிலையத்தில் 66 லட்சம் மதிப்புள்ள கரன்சி பறிமுதல் !

திருச்சி விமானநிலையத்தில் 66 லட்சம் மதிப்புள்ள கரன்சி பறிமுதல் !

திருச்சி விமானநிலையத்தில் ரூ.66 லட்சம்மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்




நேற்று இரவு 9.30 மணிக்கு திருச்சியிலிருந்து துபாய் செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக இருந்தது. பயணிகளை விமான நிலைய வாண் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது  40 வயது மதிக்கத்தக்க  பெண் பயணி தனது உடைமையில் 66 லட்சம் மதிப்புள்ள யூரோ,சிங்கப்பூர், ஓமன் உள்ளிட்ட வெளிநாட்டு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது..





இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments