// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** 5 வார்டுகளுக்கு நாளை மறு வாக்குப்பதிவு

5 வார்டுகளுக்கு நாளை மறு வாக்குப்பதிவு

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் 2 வார்டுகள் உள்பட தமிழக முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை திங்கட்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்றது.





இதில், சில இடங்களில் வாக்குபதிவின்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்குபதிவில் குளறுபடிகள் ஏற்பட்டது. இதனால் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவரிடம் விரிவான அறிக்கையை மாநில தேர்தல் ஆணையம் கேட்டு பெற்றது. அந்த அறிக்கையின்படி தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, சென்னை பெசன்ட்நகர் ஓடைக்குப்பம் வார்டு எண் 179 வாக்குச்சாவடி எண் 5059, வண்ணாரப்பேட்டை 179-ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 1174, மதுரை திருமங்கலம் நகராட்சி 17-ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 17, அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி 16ம் வார்டு வாக்குச்சாவடிகள் 16M, 16W, திருவண்ணாமலை நகராட்சி 25ம் வார்டு வாக்குச்சாவடிகள் 57M, 57W ஆகிய 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.


Post a Comment

0 Comments