BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** வாக்கு எண்ணும் மையத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்படவில்லை....! தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் வாக்குவாதம்

வாக்கு எண்ணும் மையத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்படவில்லை....! தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் வாக்குவாதம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது....வாக்கு பதிவு முடிந்த பிறகு வாக்கு சாவடி முகவர்கள் முன்பு வாக்குப்பதிவு இயந்திரம் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பபட்டுள்ளது. 



வருகிற 22 ஆம் தேதி  செவ்வாய் கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ..திருச்சி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது..திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளுக்கு ஜமால் முகம்மது கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.. சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு அறையில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டிருக்கும்.  வாக்கு பதிவு இயந்திரகளை அருகில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் ஜனநாயக கட்சி 29 வது வார்டு வேட்பாளர் ராயல் சித்திக் வாக்கு எண்ணும் மையத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு  வந்து வாக்கு பதிவு  இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பார்வையிட வந்துள்ளார்.அப்போது அந்த கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்ட கேமிரா  வேலை செய்யவில்லை  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அப்போது 29 வது வார்டு வேட்பாளர்  ராயல் சித்திக் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு பேச்சுவார்த்தை பிறகு அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது.வாக்கு எண்ணிக்கை நியாயமாக முறையில் நடைபெற தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments