BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி மாநகராட்சி பூங்காவில் சந்தன மரத்தை வெட்டிய நபர் கைது

திருச்சி மாநகராட்சி பூங்காவில் சந்தன மரத்தை வெட்டிய நபர் கைது

திருச்சி  மாநகராட்சி பூங்காவில் சந்தன மரத்தை வெட்டிய நபர் கைது 

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான  பூங்கா திருச்சி நீதிமன்றம் அருகே உள்ளது. 



இந்த பூங்காவில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் அங்கு அதிகளவு மரங்கள் நடப்பட்டுள்ளன. இதில் அரசமரம், புங்கை மரம், வேப்ப மரம் ஆகியவற்றுடன் சந்தன மரமும்  வனத்துறை அனுமதி பெற்று வளர்க்கப்பட்டு வந்தது




இந்நிலையில் இந்தப் பூங்காவின் காவலாளி வழக்கம்போல் காலையில் பூங்காவை சுத்தம் செய்து வந்த போது மரம் வெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து  அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

 அங்கு வந்த உதவி ஆய்வாளர் மோகன் விசாரணை நடத்தினார். அந்த பகுதியில்  உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து  வெட்டிய நபரை பிடித்து உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. சந்தன மரம் வெட்டிய நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

Post a Comment

0 Comments