NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** ஹிஜாப் அகற்ற சொன்ன விவகாரம் இந்திய தவ்ஹீத் ஜமாத் கடும் கண்டனம்

ஹிஜாப் அகற்ற சொன்ன விவகாரம் இந்திய தவ்ஹீத் ஜமாத் கடும் கண்டனம்

 ஹிஜாப் அகற்ற சொன்ன  விவகாரம் இந்திய தவ்ஹீத் ஜமாத் கடும் கண்டனம் 



கர்நாடகா மாநிலத்தில் கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர முடியாது என RSS பா.ஜ.க அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஹிஜாப் விவகாரம் உலகம் முழுவதிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது...




இந்த நிலையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் நடைபெற்றது.. மதுரை மேலூர் 8 வார்டில் அங்குள்ள ஒரு வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க சென்றார்.. அப்போது பா.ஜ.க வை சேர்ந்த பூத்  ஏஜென்ட் கிரிராஜ் அந்த பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்ற சொல்லி பிரச்சனை செய்துள்ளனர்...


அப்போது அந்த இடத்தில் மற்ற அதிகாரிகள் கிரிராஜிடம் வந்து வாக்கு வாதம் செய்ததால் சிறிது சலசலப்பு ஏற்ப்பட்டது....


இந்த விவகாரம் தொடர்பாக அமைதியாக உள்ள தமிழகத்தில்  ஹிஜாப் கட்டாயப்படுத்தி அகற்ற சொல்லிருப்பது.. இந்திய தவ்ஹூத் ஜமாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது...அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்து காவல்துறையினர் பூத் ஏஜென்ட் கிரிராஜ் கைது செய்தனர் 

Post a Comment

0 Comments