NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா!.

மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா!.

திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா!..

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழா மஜக-வின் கொடி நாளாக அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.



மேலும் இந்த மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மருத்துவ முகாம்கள், மரக்கன்று நடுதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் மஜக-வினர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வுகளில் மாவட்டச் செயலாளர் மைதீன் பொருளாளர் அந்தோணிராஜ்,துணைச் செயலாளர்கள் சையது முஸ்தபா,அன்வர்தீன், முகமது பீர்ஸா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செய்யது முகம்மது,ஷேக் மைதீன், மற்றும் நிர்வாகிகள் தமீம் அன்சாரி, துபைல் அகமது,அமீர் அம்சா, சல்மான், வாகித்,சேக் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments