NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** பிரச்சாரத்தை தொடங்கிய பெண் வேட்பாளர்

பிரச்சாரத்தை தொடங்கிய பெண் வேட்பாளர்

 திருச்சியில் திமுக பெண் வேட்பாளராக  மணிமேகலை ராஜபாண்டி அவர்கள் திருச்சி புதிய வார்டு எண் 13 கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.. மணிமேகலை ராஜபாண்டி அவர்கள் முன்னாள் 10-வது வார்டு கவுன்சிலராக திமுகவில் பெரும் பங்கு வகித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துபோன ராஜபாண்டி அவர்களின் மனைவியான மணிமேகலை ராஜபாண்டி இன்று வேட்புமனு ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.                  

மேலும் வடக்கு ஆண்டார் வீதி, வெனிஸ் தெரு சிந்தாமணி ,அண்ணாசிலை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் அவர் கூறுகையில் நான் பொது சேவையில் ஈடுபட்டு வருகிறேன் தற்போது என்னை நகர்ப்புற நிர்வாகத்துறை  அமைச்சர் கே.என்.நேரு


அவர்கள் போட்டியிட திமுக சார்பில் தேர்ந்தெடுத்துள்ளார் பொதுமக்களுக்கு எப்போதும் சேவை செய்ய கடமைப்பட்டுள்ளேன் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உடனடியாக என்னால் செய்து தர முடியும் என்றும் மக்களில் ஒருவராக நான் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார்

Post a Comment

0 Comments