திருச்சி காவிரி பாலத்தில் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்துக்குள்ளாகிய ஆட்டோ டிரைவர்.
திருச்சி காவேரி பாலம் போக்குவரத்து அதிகமாக காணப்படும் இடம் காலை முதலே வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கும் இந்நிலையில் இன்று இரவு
திருச்சி காவிரி பாலத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தலைக்கேறிய மது போதையில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் நிதானம் இல்லாமல் அங்கும் இங்கும் ஓட்டிச்சென்று காவிரி பாலத்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களில் மோதி விபத்தை ஏற்படுத்தினார் இதனால் ஆட்டோ சேதமடைந்தது ஆட்டோ ஓட்டுனருக்கும் காயம் ஏற்பட்டது.
அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு 108 உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
0 Comments