SDPI கட்சியின் 31 வது வார்டு அலுவலகம் திறப்பு விழா
SDPI கட்சியின் 31வது வார்டு பகுதி அலுவலகம் வரகனேரி பஜார் சாலையில் புதிதாக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது
இந்த திறப்பு விழாவிற்க்கு கிழக்கு தொகுதி செயலாளர் எ.எஸ், காதர்பாபு தலைமையில் தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மண்டல தலைவர் இமாம் ஹசன் பைஃசி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.கிழக்குத் தொகுதி தலைவர் வாசிக் ,தொகுப்புரை ஆற்றினார்.
விடுதலை சிறுத்தை கட்சி கணேசன் மார்க்கெட் சாது,ஸ்ரீரங்கம் மன்சூர்,பொன்னகர் ரபிக்,எஸ்.ஜே. நசுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
இந்த திறப்புவிழாவில் 31வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் ஜே.அனீஸ் பாத்திமாவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு எஸ்டிபிஐ கட்சி மற்றும் தோழமை கட்சிகள் ஆதரவுடன் பொதுமக்களிடத்தில் வாக்கு சேகரித்து வெற்றி பெற வைப்போம் என கூறினர்,
விழாவின் முடிவில் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா,நன்றி கூறினார்.
0 Comments