// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தென்னை மரம் சின்னத்தில் வாக்கு கேட்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் தீவிர பிரச்சாரம்

தென்னை மரம் சின்னத்தில் வாக்கு கேட்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் தீவிர பிரச்சாரம்

 நடைபெறவுள்ள திருச்சி மாநகராட்சி தேர்தலில் மலைக்கோட்டை பகுதி 12வது வார்டில் சுயச்சை வேட்பாளர் பாலமுருகன் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்து தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பாலமுருகன். 




அந்தவகையில் நேற்று 12 வது வார்டுக்குட்பட்ட சஞ்சய் காந்தி நகர்,  ஆர்கே நகர், கரூர் பைபாஸ் சாலையில் உள்ள நாடார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி தென்னைமர சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  பிரச்சாரத்தின்போது மஞ்சள் படை நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்


.

Post a Comment

0 Comments