// NEWS UPDATE *** தவெக ஆட்சி அமைக்க தனது ஆதரவு கடிதத்தை வழங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.. *** திருச்சி துறையூரில் 17 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோவில் கைது

திருச்சி துறையூரில் 17 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவனை அதே பள்ளியைச் சேர்ந்த 26 வயது ஆசிரியை அழைத்துச் சென்று திருமணம் செய்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியை  போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்யபட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொட்டையூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் கடந்த 5ம் தேதி பள்ளி முடிந்ததும் மாலை வீட்டுக்கு சென்றவர் மாயமானார்.

பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாணவனின் தாயார் கடந்த 11ம் தேதி துறையூர்  காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். ஆரம்பகட்ட விசாரணையில் எம்ஏ, பிஎட், எம்ஃபில் முடித்துவிட்டு மாணவன் படிக்கும் அதே பள்ளியில் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த வையாபுரி திலகவதி தம்பதியரின் மகள் சர்மிளா (26) அதே தேதியில் மாயமானது தெரிந்தது. 

6 ஆண்டுகளாக சர்மிளா இந்த பள்ளியில் வேலை செய்துள்ளார். மாணவன் ஏழாம் வகுப்பு படிக்கும்போது அவருக்கு சர்மிளா பாடம் நடத்தியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில்   ஆசிரியையும், மாணவனுக்கும் இடையே முறை தவறிய காதலாக மாறியது.

இந்நிலையில் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து துறையூரிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் சென்று  ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து திருவாரூர், வேளாங்கண்ணி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து விட்டு திருச்சியில் தனது தோழி வீட்டில் மாணவனுடன் சர்மிளா தஞ்சம் அடைந்துள்ளார் .போலீஸ் தனிப்படையினர். தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் ஆசிரியை சர்மிளா திருச்சி எடமலைபட்டி புதூரில்  தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருச்சி சென்ற துறையூர் போலீசார் ஆசிரியை சர்மிலா மற்றும் உடனிருந்த  மாணவன் ஆகிய இருவரையும் துறையூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். 

பின்னர் மாணவனுக்கு 17 வயது நடைபெறுவதாலும்,ஆசை வார்த்தை கூறி சிறுவனை ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக  போக்சோ சட்டத்தின் கீழ்  ஆசிரியை சார்மிளா கைது செய்யப்பட்டார்.

மாணவன் காப்பகத்தில் கொண்டு சென்று விடப்பட்டார்.கல்வி போதிக்கும் குருவான ஆசிரியை தன்னிடம் படித்த மாணவனை சரியாக வழிநடத்தாமல் முறைதவறி காதலனாக்கி திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments