// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி ஆதி திராவிட நல அலுவலர் காரில் ரூ.40 லட்சம் பணம் - லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை.

திருச்சி ஆதி திராவிட நல அலுவலர் காரில் ரூ.40 லட்சம் பணம் - லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை.

திருச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக பணிபுரிந்து வருபவர் சரவணக்குமார். இவர் இன்று காலை தனது காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இவரது காரில் பணம் எடுத்துச் செல்லும் தகவல் கிடைத்து அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் அருகே சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். 

அதில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மொத்தமும் 40 லட்சம் ஆகும். உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திருச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணக்குமார், மற்றும் கார் டிரைவர் மணி ஆகியோரை விழுப்புரம் பழங்குடியின அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments