திருச்சி துவாக்குடி 9வது வார்டு பகுதியில் தூய்மை பணி தீவிரம்
துவாக்குடி நகராட்சி 9வது வார்டு பகுதியில் வழக்கறிஞர் சாருமதி நகர்மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.. திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி செடிமலை முருகன் கோவில் தெருவிற்குட்பட்ட AGL பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையில் இன்று தூய்மை பணி நடைபெற்றது.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அவர்களின் வழிகாட்டுதல்படி அந்த பகுதியில் தூய்மை பணிகளை நகர்மன்ற உறுப்பினர் சாருமதி ஆய்வு செய்தார்..
அந்த பகுதியில் பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது..இன்று மாரியம்மன் வீதிஉலா வர இருப்பதால் நகராட்சி பணியாளர்களை கொண்டு தூய்மைபடுத்தும் பணி துரிதமாக செயல்பட்டு அந்த பாதை முழுவதும் இன்று சுத்தம் செய்யப்பட்டது. அதன் பிறகு தூய்மை பணியாளர்களை பெருமை படுத்தும் விதமாக தூய்மை பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளர்களுக்கு நகர்மன்ற உறுப்பினர் சாருமதி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்..
கடந்த பல வருடங்களாக இந்த பாதையினை யாரும் எந்தவித சுத்தம் செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது
0 Comments