// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி மலைக்கோட்டை பங்குனி தெப்பத்திருவிழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்சி மலைக்கோட்டை பங்குனி தெப்பத்திருவிழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் பங்குனி தெப்பத் திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. தென்கயிலாயம் என்று போற்றப்படுவதும், திருச்சிக்கு பெருமை சேர்ப்பதும், புகழ்பெற்றதுமான மலைக்கோட்டை தாயுமானவர்சுவாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும், கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவின் 9ம்நாளான இன்று தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.


முன்னதாக தாயுமானவர் சுவாமி(சிவபெருமான்), மட்டுவார்குலழி அம்பாளுடன் வாகன மண்டபத்திலிருந்து புறப்பட்டு  உள்வீதி, சின்னக்கடைவீதி, என்.எஸ்.பி ரோடு வழியாக வீதிஉலாவந்து தெப்பதீர்த்தக்குளத்தை வந்தடைந்து, அங்கு வண்ணமயமாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர்; தெப்பமானது தீர்த்தக்குளத்தில் 5முறை வலம்வந்து ஆண்டாள் வீதிவழியாக ஆலயத்தை சென்றடைந்தது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்கண்டனர்.

Post a Comment

0 Comments